ஒரு பாடல் காட்சியில் 400 உடைகள்!

ஒரு பாடல் காட்சியில் 400 உடைகள்!

செய்திகள் 3-Oct-2013 2:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹர்சன், பூனம் கௌர் ஜோடியாக நடிக்கும் படம், ‘ரணம்’. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜயசேகரன் இயக்குகிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்தப் படத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ‘எங்கட போன ரோமியோ… என்னட ஆனே ரோமியோ…’ என துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஹர்சன் - பூனம் கௌர் ஜோடிக்கு 400 உடைகள் பயன்படுத்தப்பட்டு, வண்ணமயமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளனர். ‘‘ஒரு பாடல் காட்சியில் கதாநாயகன் -கதாநாயகிக்கு 400 உடைகள் பயன்படுத்தியிருப்பது இதுதான் முதல் முறை’’ என்கிறார் ‘ரணம்’ படத்தின் இயக்குனர் விஜயசேகரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;