சூப்பர் ஸ்டார் மகனை இயக்குகிறாரா மணிரத்னம்?

சூப்பர் ஸ்டார் மகனை இயக்குகிறாரா மணிரத்னம்?

செய்திகள் 3-Oct-2013 1:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல நடிகர், நடிகைகளின் வாரிசுகளும் நடிக்க வந்து, சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் சீஸன் இது. மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சலமான் நடிகராக அறிமுகமாகி மலையாள சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, விரைவில் அவர் ஒரு தமிழ் படத்திலும் நடிக்க இருக்கிறார். மம்முட்டியை தொடர்ந்து மலையாள திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் மோகன்லாலின் மகன் ப்ரணவும் சினிமாவில் களம் இறங்க இருக்கிறார். இவரை, மலையாளத்தில் மோகன் லாலை வைத்து நிறைய படங்களை இயக்கிய மேஜர் ரவி அறிமுகப்படுத்தப் போகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் ப்ரணவ் மேஜர் ரவி இயக்கத்தில் நடிக்கவில்லை என்றும் அவர் அறிமுகமாகப்போவது தமிழின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தான் என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு! மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் மோகன் லால் நடித்திருந்தார் அல்லவா? அதிலிருந்து மணிரத்னம் மீது அதிக மதிப்பை வைத்திருக்கும் மோகன்லாலுக்கு தன் மகன் அவர் இயக்கத்தில் அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறாராம்!. ஆனால் இதையெல்லாம் மறுத்து, ‘‘ப்ரணவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. ஆனால் அவர் யார் இயக்கத்தில், எந்த மொழியில் முதன் முதலாக நடிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் மோகன்லால் தரப்பினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;