மீண்டும் நினைத்தாலே இனிக்கும்!

மீண்டும் நினைத்தாலே இனிக்கும்!

செய்திகள் 3-Oct-2013 1:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த படங்களில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. கே.பாலச்சந்தர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினி, கமலுடன் ஜெயப்ரதா நடிக்க, கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்களுக்காகவே பல தடவை இந்தப் படத்தை பார்த்துள்ளனர் ரசிகர்கள்! 1979 ல் வெளிவந்து சக்கைபோடு போட்ட இந்தப் படத்தை தற்போது இன்றைய புதிய தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலியை மேம்படுத்தி, நாளை ரிசீஸ் செய்யவிருக்கிறது ராஜ் டி.வி.நிறுவனம். இந்த வரிசையில் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த ‘16 வயதினிலே’ படமும் விரைவில் வெளிவரவிருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;