நெருப்புக் கோழி மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

நெருப்புக் கோழி மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

செய்திகள் 3-Oct-2013 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் – நடிகைகள் படத்திற்காக குதிரை, கழுதை, யானை மீதெல்லாம் ஏறி சாகசங்கள் செயவது வழக்கம்! ‘ராப்பகல்’ என்ற மலையாள படத்தில் யானை மீது ஏறி, படத்தின் நாயகன் மம்முட்டியிடம் திட்டு வாங்கியவர் நயன்தாரா! இப்படி யானை, குதிரை, கழுதை மீதெல்லாம் ஏறி, சாகசங்கள் புரிந்துவரும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகை பாமா கொஞ்சம் மாறுபட்டவர் போலும்! இல்லையென்றால் நெருப்புக் கோழி மீதெல்லாம் ஏறி பரபரப்பை ஏற்படுத்துவரா என்ன? இது நடந்தது நம் இந்தியாவில் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்! ரொமப் தூரத்தில் இருக்கும் ஆப்பிரிக்க நாட்டில் தான்! அங்கு தற்போது ‘நாக்கு பென்டா நாக்கு டாகா’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக தான் பாமா நெருப்புக் கோழி மீது ஏறியிருக்கிறார். இந்தப் படத்தில் இந்திரஜித், பாமா ஜோடியாக நடிக்க, வயலார் மாதவன் குட்டி இயக்கி வருகிறார். ஆப்பிரிக்காவில் நடப்பது மாதிரியான கதை என்பதால் படத்திற்கு ‘நாக்கு பென்டா நாக்கு டாகா’ என்று ஆப்பிரிக்க மொழியிலேயே பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயருக்கு ’ஐ லவ் யூ, ஐ வான்ட் யூ’ என்று அர்த்தமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;