எஸ்.வி.சேகருக்கு தொடர் கொலைமிரட்டல்..!

எஸ்.வி.சேகருக்கு தொடர் கொலைமிரட்டல்..!

செய்திகள் 3-Oct-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

முன்னாள் எம்.எல்.ஏவும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி.சேகர், 'மகாபாரதத்தில் மங்காத்தா' என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார். மகாபாரதத்தை கொச்சை படுத்துவதாக கூறி இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சில மாதங்களுக்கு முன் சுவரொட்டிகள் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதன் பிறகு தற்போது நேற்று இரவு 10.00 மணியளவில் "இங்கு இருந்து ஓடி விடு இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்' என தொலைபேசி கூறி இணைப்பை துண்டித்து விட்டனர் எனவும், சுமார் 10 தடவைக்கு மேல் பல தொலைபேசி அழைப்புகள் வந்தாக கூறி பட்டிணப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எஸ்.வி.சேகர் கொடுத்த புகாரின் அடைப்படையில் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்லது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;