ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து ஏ.ஆர்.ரெஹைனா!

ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து ஏ.ஆர்.ரெஹைனா!

செய்திகள் 1-Oct-2013 2:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரோஜா’ படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு மலையாள படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்து, இசை அமைத்த படம் ‘யோதா’. இந்தப் படத்தில் மோகன்லால், மதுபாலா ஜோடியாக நடிக்க, சங்கீத் சிவன் இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு படிப் படியாக வளர்ந்து இசை உலகின் உச்சத்தைத் தொட்ட இசைப்புயல் வேறு எந்த ஒரு மலையாள படத்திற்கும் இசை அமைத்ததில்லை. ஆனால் இப்போது அவரை தொடர்ந்து அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா ஒரு மலையாள படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார். படத்தின் பெயர், ‘வசந்தத்தின் கனல் வழிகள்’. கேரள அரசியல் தலைவர்களின் வரலாறு பற்றிய படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை வி.அனில் இயக்குகிறார். இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;