ஹங்கேரியில் அனிருத்!

ஹங்கேரியில் அனிருத்!

செய்திகள் 30-Sep-2013 4:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. இதில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை ப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கும், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு படத்தின் ரீ-ரிக்கார்டிங் வேலையை இசை அமைப்பாளர் அனிருத்திடம் ஒப்படைத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். அதனைத் தொடர்ந்து ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ரீ-ரிக்கார்டிங் வேலைகளை கவனிக்க ஹங்கேரி – புத்தாபெஸ்ட்டுக்கு பயணமாகியுள்ளனர் செல்வராகவனும், அனிருத்தும்! ‘இரண்டாம் உலகம்’ தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;