ஆன்ட்ரியாவுடன் லட்சத் தீவு செல்லும் நாயகன்!

ஆன்ட்ரியாவுடன் லட்சத் தீவு செல்லும் நாயகன்!

செய்திகள் 30-Sep-2013 1:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அன்னயும் ரசூலும்’ மலையாள படத்தின் மூலம் மோலிவுட்டில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா! ஃபஹத் ஃபாசிலுடன் ஜோடியாக நடித்த இந்தப் படம் ஆன்ட்ரியாவுக்கு மலையாளத்தில் நல்ல பெயரை பெற்றுத்தர, தொடர்ந்து பல மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆன்ட்ரியாவுக்கு! அந்த வரிசையில் ஆன்ட்ரியா தற்போது நடித்து வரும் மலையாள படம் ‘லண்டன் பிரிட்ஜ்’. இந்தப் படத்தில் ப்ருத்திவிராஜுடன் ஜோடியாக நடித்து வரும் ஆன்ட்ரியா, அடுத்து மோலிவுட்டின் இன்னொரு இளம் ஹீரோவான ஆசிஃப் அலியுடனும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘மோசயிலெ குதிரை மீன்கள்’ என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தை அஜித் பிள்ளை இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை லட்சத் தீவின் பின்னணியில் நடப்பதுபோல் இருப்பதால் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு லட்சத் தீவிலேயே நடைபெறவிருக்கிறது. ஆன்ட்ரியா தற்போது தமிழில் நடித்து வரும் படம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;