பாட்டோட வருகிறார் அழகுராஜா!

பாட்டோட வருகிறார் அழகுராஜா!

செய்திகள் 30-Sep-2013 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற தீபாவளி திருநாளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கும் படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. 'ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தாயாரித்து வரும் இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை, ’சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என ஹாட்ரிக் வெற்றியை தந்த எம்.ராஜேஷ் இயக்க, எஸ். தமன் இசை அமைக்கிறார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி முதன் முதலாக நடிக்கும் இப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வருகிற 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘செல்லம்…’ என துவங்கும் இந்தப் பாடலை ராகுல் நம்பியார் பாடியிருக்கிறார். படத்தின் மொத்த பாடல்களின் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் அக்டோபர் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வரவிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு சரவெடி பட்டாசாக அமையப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டிரைலர்


;