ஷாருக்கானை முந்திய ரன்பீர் கபூர்!

ஷாருக்கானை முந்திய ரன்பீர் கபூர்!

செய்திகள் 30-Sep-2013 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரன்பீர் கபூர், பல்லவி ஷர்தா ஜோடியாக நடித்திருக்கும் ஹிந்திப் படம் ‘பேஷரம்’. இந்தப் படத்தை, சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ’தபாங்’ படத்தை இயக்கிய அபினவ் காஷ்யாப் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வருகிற 2-ஆம் தேதி ரிலீசாகிறது. ‘தபாங்’ இயக்குனர் அபினவ் காஷ்யாப் இயக்கத்தில் ரன்பீர் கபூர் முதன் முதலாக நடித்திருக்கும் இப்படம் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்க, படம், இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 3,600 தியேட்டர்களில் ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்தியாவில் 3,500 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 700 திரையரங்குகளிலும் வெளியாகி, வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியாக இருக்கும் ரன்பீர்கபூரின் ‘பேஷரம்’ ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;