டிசம்பரில் யான்!

டிசம்பரில் யான்!

செய்திகள் 30-Sep-2013 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயரித்து வரும் படம் ‘யான்’. இந்தப் படத்தில் ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடிக்க, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்தப் படத்தில் ஜீவா, துளசி நாயருடன் பிரகாஷ் ராஜ், நாசர் முதலானோரும் நடிக்க படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. ரவி கே.சந்திரன் முதன் முதலாக இயக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைதுள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை டிசம்பர் மாதம் இறுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக இருந்து, இயக்குனராக வெற்றிபெற்ற கே.வி.ஆனந்தைத் தொடர்ந்து ரவி கே.சந்திரன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் ‘யான்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோச்சடையான்- 'மெதுவாகத்தான்' சாங் ப்ரோமோ


;