நிஜக் கதையில் டேனியல் பாலாஜி!

நிஜக் கதையில் டேனியல் பாலாஜி!

செய்திகள் 27-Sep-2013 12:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டேனியல் பாலாஜி மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் படம் ‘ஞானகிறுக்கன்’. 30 வருடங்களுக்கு முன் நடந்த நிஜ சம்பவம் ஒன்றை கதை கருவாக வைத்து, வித்தியாசமான கதை களத்தில் சொல்லப்படும் படமாம் இது. இந்தப் படத்தை ‘தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ்’ பட நிறுவனம் சார்பாக, சி.தங்கம்மாள் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் டேனியல் பாலாஜியின் மனைவியாக செந்தி நடிக்கிறார். ஜெகா என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, அர்ச்சனா கவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை, வசனம் எழுதி இளைய தேவன் இயக்க, தாஜ்னூர் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;