அக்டோபரில் ரஜினி கீதம்!

அக்டோபரில் ரஜினி கீதம்!

செய்திகள் 26-Sep-2013 6:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா இயக்கி வரும் ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருக்க, தீபிகா படுகோனே, ஷோபனா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ‘எந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரவிருக்கும் இந்தப் படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வர, இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வருகிற 7—ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ‘எங்கே போகுது வானம்’ எனத் துவங்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;