இணையும் அஜித், விஜய்!

இணையும் அஜித், விஜய்!

செய்திகள் 26-Sep-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களை பொறுத்தவரையில் வருகிற பொங்கல் அடிக் கரும்பாய் இனிக்கப் போகிறது. ‘இளைய தளபதி’ விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், நேசன், ஆர்.பி.சௌத்ரி கூட்டணியில் உருவாகி வரும் ’ஜில்லா’ படத்தை பொங்கல் விருந்தாக படைக்கும் விதமாக படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதுமாதிரி ‘தல’ அஜித், ‘சிறுத்தை’ சிவா, தமன்னா கூட்டணியில் உருவாகி வரும் ‘வீரம்’ படமும் பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. இதற்கிடையில் விஜய்யுடன் ‘ஜில்லா’வில் நடித்து வரும் மோகன் லாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வாரக் காலம் ’ஜில்லா’வின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட, ‘ஜில்லா’வின் ரிலீஸ் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ’ஜில்லா’வுக்கு மோகன்லால் இன்னும் ஒரு சில நாட்களை ஒதுக்கிக் கொடுத்து, ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருவதால், தளபதியின் ’ஜில்லா’வும், தலயின் ‘வீரமு’ம் திட்டமிட்டபடி பொங்கல் வெளியீடாக வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது. ‘ஜில்லா’ படத்தைத் தயாரிக்கும் ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியும், ‘இளைய தளபதி’ விஜய்யும் இணைந்த ‘திருப்பாச்சி’ படம் 2005 பொங்கல் தினத்தன்று வெளியாகி தான் சூப்பர் ஹிட்டானது என்ற சென்டிமென்டும் ‘ஜில்லா’வை பொங்கலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக அடுத்த பொங்கலுக்கு அஜித்தும், விஜய்யும் இணைந்து கலக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;