ஹாலிவுட்டுக்குச் செல்லும் ஸ்ரீதேவி!

ஹாலிவுட்டுக்குச் செல்லும் ஸ்ரீதேவி!

செய்திகள் 25-Sep-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல், பாலிவுட் சினிமாவிலும் இளைஞர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி! திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தைகள் என மும்பையில் செட்டில் ஆன ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்து சமீபத்தில் நடித்த படம் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், ஹீரோயின் போன்றது மாதிரியான வேடங்கள் வந்தால்தான் நடிப்பேன் என்று கூறி வந்தவருக்கு இப்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹாலிவுட் பிரபலம் ராபர்ட் ரெட்ஃபோர்ட்டின் மகள் எமி ரெட்ஃபோர்ட் இயக்கும் ‘கௌபாய் அன்ட் இந்தியன்ஸ்’ என்ற படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மெரின் ஸ்டிரிப்புடன் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஸ்ரீதேவி! பாலிவுட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத் முதலானோர் ஹாலிவுட்டுக்குச் சென்று நடித்திருக்கிறார்கள் என்றாலும் 50 வயதுடைய தென்னிந்திய அழகியான ஸ்ரீதேவி ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதுதான் பாலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாம் - TRAILER


;