ஜெயிலுக்குள் டான்ஸ் ஆடும் சஞ்சய் தத்!

ஜெயிலுக்குள் டான்ஸ் ஆடும் சஞ்சய் தத்!

செய்திகள் 24-Sep-2013 12:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜெயிலுக்குப் போன பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீண்டும் நடனமாடுகிறார்! ஆனால் பாலிவுட் படத்திற்காக இல்லை; அவர் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலில்! மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சிறைச் சாலைகளை மேம்படுத்த, நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் ஜெயில் நிர்வாகத்தினர். இந்த கலை நிகழ்ச்சியில் சஞ்சய் தத் உட்பட 20 ஜெயில் கைதிகள் பங்கேற்று நடனமாட இருக்கிறார்கள். இதில் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம் பெற்ற லுங்கி டான்ஸ், ‘முன்னாபாய்’ படத்தில் இடம் பெற்ற தேசபக்தி பாடல் உட்பட பல பாடல்களுக்கு நடனம் ஆட இருக்கிறார்கள் சஞ்சய் தத் குழுவினர். மும்பையிலுள்ள பால் காந்தர்வ் ஆடிட்டோரியத்தில் வருகிற வியாழக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. தற்போது சஞ்சய் தத் அந்த கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையில் படு பிசியாக இயங்கி வருகிறாராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;