’நய்யாண்டி’ புதிய சாதனை!

’நய்யாண்டி’ புதிய சாதனை!

செய்திகள் 24-Sep-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மரியான்’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடிப்பில் ரிலீசாகவிருக்கும் படம் ‘நய்யாண்டி’. இதில் தனுஷுக்கு ஜோடியாக இன்றைய தமிழ் சினிமாவின் கனவு தேவதை நஸ்ரியா நடித்திருக்க, ’களவாணி’ புகழ் சற்குணம் இயக்கியிருக்கிறார். ’ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்’ பேனரில் எஸ்.கதிரேசன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு எம்.ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். சற்குணம், தனுஷ், நஸ்ரியா முதன் முதலாக இணைந்துள்ள இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற, இதுவரையில் 11 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் டீஸரை பார்த்திருக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மரியான்’ தனுஷுக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் ’நய்யாண்டி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘மரியான்’ டிரைலர்


;