ஹாரிஸ் இடத்தில் அனிருத்?

ஹாரிஸ் இடத்தில் அனிருத்?

செய்திகள் 24-Sep-2013 11:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ‘பி.வி.பி.சினிமா’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. வருகிற தீபாவளி விருந்தாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர். இவரது இசையில் அமைந்த பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வர்வேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனுக்கும், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்வராகவன், படத்தின் ரீ-ரிக்கார்டிங் வேலைகளை இசை அமைப்பாளர் அனிருத்திடம் ஒப்படைக்க, தற்போது ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ரீ-ரிக்கார்டிங் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் அனிருத்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;