பாலகுமாராவுக்கு ’யு’ சர்டிஃபிகெட்!

பாலகுமாராவுக்கு ’யு’ சர்டிஃபிகெட்!

செய்திகள் 23-Sep-2013 3:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் சேதுபதி ஹீரோவக நடித்து விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்தப் படத்தை கோகுல் இயக்க, வி.எஸ்.ராஜ்குமாரின் லியோவிஷ்னும், ஜெ.சதீஷ்குமாரின் ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷனும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்வாதி ரெட்டி, நந்திதா, பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடித்த படங்களின் தொடர் வெற்றியால் அடுத்து அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சென்சருக்கு சென்ற இந்தப் படத்தை பார்த்த சென்சர் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;