படிக்கும்போதே டீச்சர்!

படிக்கும்போதே டீச்சர்!

செய்திகள் 23-Sep-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

படிக்கும்போதே டீச்சர்! விஷாலின் ’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘பாண்டியநாடு’. சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து வரும் இந்தப் படத்தில் லட்சுமி மேனன் ஸ்கூல் டீச்சராக நடித்து வருகிறார். நிஜத்தில் லட்சுமி மேனன் ப்ளஸ் ஒன் படித்து வரும் மாணவி! இந்தப் படத்தில், புடவை கட்டிக்கொண்டு டீச்சராக தோன்றும் இவரது கேரக்டர், ‘காக்க காக்க’ படத்தில் ஜோதிகா ஏற்று நடித்த கியூட்டான வேடம் மாதிரி ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக அமைந்திருக்கிறதாம். ‘குட்டிப்புலி’ படத்திற்குப் பிறகு லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்திறகு டி.இமான் இசை அமைத்திருக்க, படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று சமீபத்தில் வெளியானது. ’பாண்டியநாடு’ தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘பூஜை’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர்


;