சிவகார்த்திகேயனுக்கு பட்டம்!

சிவகார்த்திகேயனுக்கு பட்டம்!

செய்திகள் 21-Sep-2013 1:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில், ‘மெரினா’ படம் மூலம் நடிகராக களமிறங்கிய சிவகார்த்திகேயன், அதற்கடுத்து நடித்த படங்கள் ‘3’, ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப் படங்களில் ‘3’ மற்றும் ‘மனம் கொத்தி பறவை’ ஆகியவை சிவாவுக்கு பேசும்படியாக அமையவில்லையென்றாலும், அதற்கடுத்து வந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ படங்கள் நல்ல வசூல் செய்து, கோலிவுட்டில் பேசப்படும் ஹீரோவாகி விட்டார். இந்நிலையில் இவர் நடித்து சமீபத்தில் ரிலீசாகிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வசூல் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ மதன், சிவகார்த்திகேயனுக்கு ‘வசூல் நாயகன்’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;