ஆமீர்கானுக்கு அமெரிக்க விருது!

ஆமீர்கானுக்கு அமெரிக்க விருது!

செய்திகள் 21-Sep-2013 12:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் ‘மிஸ்டர் பர்ஃபெக்‌ஷனிஸ்ட்’ நடிகர் ஆமீர்கான். இவர் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவஜெயதே’ என்ற நிகழ்ச்சி இந்தியாவிலுள்ள மக்களை மட்டுமல்லாமல் உலகம் முழுக்க உள்ள இந்திய மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்தியா எதிர்கொள்ளும் சில சமூக பிரச்சனைகளையும், சவால்களையும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் ஆமீர்கான்! மக்களிடத்தில் விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக ஆமீர்கான் நடத்திய இந்த நிகழ்ச்சியை பாராட்டும் விதமாகவும், ஆமீரின் சமூக சேவையை கௌரவிக்கவும் அமெரிக்காவின் ‘எப்ரோட் மீடியா’ நிறுவனம் முடிவு செய்து, அவருக்கு ஒரு சிறப்பு விருது வழங்க இருக்கிறது. இதற்கான விழா அடுத்த மாதம் 28-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு ஆமீர் அந்த விருதை பெறவிருக்கிறார். சமீபத்தில், பிரபல டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்த உலகின் 100 உன்னத மனிதர்களில் ஆமீர் ஒருவராக தேர்வாகியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;