வேந்தரிடம் விஷால் படம்?

வேந்தரிடம் விஷால் படம்?

செய்திகள் 21-Sep-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்து வரும் படம் ‘பாண்டிய நாடு’. விஷாலின் ‘விஷால் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். பாரதிராஜா, விக்ராந்த், சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் டிராக் ஒன்றை நாளை மாலை 3 மணிக்கு சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் வெளியிட இருக்கிறார்கள். விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பட்டத்துயானை’ படம் எதிரபார்த்த வெற்றியை பெறவில்லை. அது மாதிரி விஷால் நடிப்பில், சுந்தர்.சி இயக்கியிருக்கும் ‘மதகஜராஜா’ படம் ஒரு சில பிரச்சனைகளில் சிக்கி ரிலீசாகாமல் இருக்க, விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ’பாண்டிய நாடு’ படத்தை ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘பூஜை’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர்


;