அரசியலில் மம்முட்டி?

அரசியலில் மம்முட்டி?

செய்திகள் 20-Sep-2013 4:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கேரள அரசியலை பொறுத்த வரையில் அதில் சினிமா கலைஞர்களின் பங்களிப்பு ரொம்பவும் குறைவுதான். இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள், படு தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, சமீபத்தில் ஒரு சில மலையாள மீடியாக்களிலும், சோஷியல் நெட்வொர்க்குகளிலும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய செய்தி நடிகர் மம்முட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார் என்பது! மலையாள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசியல் பிரமுகர்களிடையேயும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது இந்த செய்தி! இது குறித்து மம்முட்டி அளித்த விளக்கத்தில், ’’தற்போது வந்திருக்கும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போக்கிரி ராஜா - டிரைலர்


;