‘அட்மஸ்’ கையில் 7 படங்கள்!

‘அட்மஸ்’ கையில் 7 படங்கள்!

செய்திகள் 20-Sep-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது எந்த ஒரு மொழி படமானாலும் அது இந்தியாவில் வெளியாகும் அதே நேரத்தில் வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் செய்யும். அந்த வகையில் அமரிக்காவில் திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருவது ‘அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம்தான். ஏற்கெனவே இந்த நிறுவனம் ஏராளமான தமிழ் படங்களை வாங்கி வெளியிட்டிருக்கும் நிலையில் அடுத்து தமிழில் வெளிவரவிருக்கும் 7 பெரிய படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்றுக் கொண்டுள்ளது. அந்தப் படங்கள் ‘ஆல் இன் ஆல அழகுராஜா’, ‘பிரியாணி’, ‘வணக்கம் சென்னை’, ‘நய்யாண்டி’, ‘என்றென்றும் புன்னகை’, ‘வீரம்’, ‘ஜில்லா’ ஆகியவை தான். தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படத்தயாரிப்பாளரை பொறுத்தவரையில் படத்தின் வெளிநாட்டு உரிமை, சாட்லைட் உரிமை மூலம் கிடைக்கும் தொகை மிகவும் கை கொடுக்கும் அமசம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;