யார் அந்த இயக்குனர்கள்?

யார் அந்த இயக்குனர்கள்?

செய்திகள் 20-Sep-2013 10:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கலைஞர் தொலைக்காட்சியின் ‘நாளைய இயக்குனர் 4’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்ற 14-ஆம் தேதி சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, கே.பாக்யராஜ், வசந்த், நளன் குமாரசாமி, நடிகர்கள் எஸ்.வி.சேகர், அருண் விஜய், விஜய் ஆதிராஜ் என நிறைய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதி போட்டிக்கு தேர்வான 7 போட்டியாளர்களின் குறும்படங்களை நடுவர்களான சுரேஷ்கிருஷ்ணா, சிம்புதேவன், பாண்டிராஜ் ஆகியோர் மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

இதில் முதல் இடத்தை ‘காற்று’ குறும்படத்தை இயக்கியதன் மூலம் கோவையைச் சேர்ந்த வேந்தன் பெற்றார். இரண்டாம் இடத்தை கோவையைச் சேர்ந்த சத்ரி-சூரியாவும், மூன்றாம் இடத்தை கோவையைச் சேர்ந்த சசு.மாரியப்பன் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஜான்சனும் பெற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் தலைவர் அமிர்தம் பரிசினையும், விருதினையும் வழங்கினர். அப்போது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் கே.ஜி.ஜெயவேல், இயக்குனர் விஜய் குமார் விஜயன் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சி விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம - டிரைலர்


;