வித்தியாசமான பைக்கில் வலம் வரும் ஹீரோ!

வித்தியாசமான பைக்கில் வலம் வரும் ஹீரோ!

செய்திகள் 19-Sep-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலகிருஷ்ணா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தெலுங்கு படம் ‘ஜெயசிம்ஹா’ இந்தப் படத்தை ‘14 ரீல் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்க, ஸ்ரீனு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்க, படம் முழுக்க அவர் ஒரு வித்தியாசமான பைக்கில் கம்பீரமாக வலம் வருவாராம்! இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் ஒரு பைக்கை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளனர். இந்த பைக்கில் பாலகிருஷ்ணா வலம் வருவதுமாதிரியான காட்சிகளை சமீபத்தில் படம் பிடித்துள்ளனர். இதில் பாலகிருஷ்ணாவுடன் சோனால் சௌஹான் ஜோடியாக நடிக்க, இன்னொரு கதாநாயகியும் உண்டாம். அவருக்கான தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இஞ்சி இடுப்பழகி - டிரைலர்


;