வெற்றிமாறன் டீமின் ‘பொறியாளன்’!

வெற்றிமாறன் டீமின் ‘பொறியாளன்’!

செய்திகள் 18-Sep-2013 1:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஏஸ் மாஸ் மீடியாஸ்’ சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜுலு தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொறியாளன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தின் இயக்குனர் மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் தனுகுமார்.
ஹரிஷ் கல்யாண் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தெலுங்கு நடிகை ரக்ஷிதா. தமிழில் ஆனந்தியாக அறிமுகமாகியிருக்கிறார். பிரபுசாலமன் இயக்கும் புதிய படமான ‘கயல்’ படத்திலும் இவர்தான் ஹீரோயின்.
இம்மாத இறுதியில் ‘பொறியாளன்’ படத்தின் இசை வெளியீட்டையும், படத்தை அக்டோபரிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;