மம்முட்டிக்காக எடிட்டராக மாறிய இயக்குனர்!

மம்முட்டிக்காக எடிட்டராக மாறிய இயக்குனர்!

செய்திகள் 18-Sep-2013 12:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’நேரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்ஃபோன்ஸ் புத்திரன் ஒரு ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். இது ‘நேரம்’ படத்தின் ஹிந்தி ரீ-மேக் என்று யாரும் நினைத்திட வேண்டாம். ஜோஸ் மாத்யூ இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘ஷட்டர்’ படத்தை தான் ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார். ’நேரம்’ படத்தினை இயக்கியதோடு அப்படத்தின் திரைக்கதை அமைப்பு, எடிட்டிங் பணிகளையும் அல்ஃபோன்ஸ் புத்திரனே கவனித்திருந்தார். குறிப்பாக இதில் அவரது எடிட்டிங் பணி ரொம்பவும் பேசப்பட்டது. இதனால் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர, அடுத்து ஆஷிக் அபு இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் ‘கேங்ஸ்டர்’ மலையாள படத்தின் எடிட்டிங் பணியை கவனிக்க இருக்கிறார் அல்ஃபோன்ஸ் புத்திரன்! இயக்குனராக வெற்றிபெற்ற ஒருவர் வேறொரு படத்தில் எடிட்டராக பணிபுரிவது அரிதான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘கேங்ஸ்டர்’ படத்தில் மம்முட்டியுடன் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகள் முடிந்ததும் தமிழுக்கு வர இருக்கிறார் அல்ஃபோன்ஸ் புத்திரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;