‘தரமணி’யை வாங்கிய ஜே.எஸ்.கே.!

‘தரமணி’யை வாங்கிய ஜே.எஸ்.கே.!

செய்திகள் 18-Sep-2013 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தங்கமீன்கள்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான பாராட்டை பெற்று ஓடிக்கொண்டிருக்க, ராம் தனது அடுத்த படமான ‘தரமணி’யில் பிசியாகி விட்டார். வசந்த் ரவி, ஆன்ட்ரியா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை ‘கட்டுமரம் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் டாக்டர் எல்.கோபிநாத் ஜிஷான் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘தங்கமீன்கள்’ படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவான ‘தங்கமீன்கள்’ படத்தை வாங்கி வெளியிட்ட ’ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ ஜே.சதீஷ்குமார், ‘கட்டுமரம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைது ‘தரமணி’ படத்தையும் தயாரித்து வெளியிட இருக்கிறார். ஜே.எஸ்,கே.ஃபிலிம் கார்ப்பரேஷனின் அடுத்த வெளியீடாக வரவிருக்கும் படம் விஜய்சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;