காதலியை கரம் பிடிக்கும் காமெடி நடிகர்!

காதலியை கரம் பிடிக்கும் காமெடி நடிகர்!

செய்திகள் 18-Sep-2013 10:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அங்காடித் தெரு’, ‘தெய்வத்திருமகள்’, ‘நீர்ப்பறவை’ என முப்பது படங்களுக்கும் மேல் காமெடி கேர்கடர்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவரது உண்மையான பெயர் லிங்கேஸ்வரன். கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் பிளாக் பாண்டி சென்னையை சேர்ந்த உமேஸ்வரி பத்மினியை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். உமேஸ்வரி எம்.பி.ஏ.பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;