‘‘நடிப்புல நான் இன்னும் நிறைய கத்துக்கணும்!’’

‘‘நடிப்புல நான் இன்னும் நிறைய கத்துக்கணும்!’’

செய்திகள் 17-Sep-2013 5:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை தீபம் ஸ்பெஷல் சில்ரன்ஸ் பள்ளிக்காக, இந்தியாவில் முதன்முறையாக தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு ஜீ மைம் ஸ்டுடியோ சார்பில் "மா" என்கிற பெயரில் மைம் ஷோ நிகழ்த்திக் காட்டினர் மைம் கோபி குழுவினர். 8 வயதில் இருந்து 35 வயது உடைய கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். சென்னையிலுள்ள எழும்பூர் மியூசியம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிஈள் இயக்குநர் பிரபுசாலமன், நடிகர் சிவகார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், நடிகர் சேது (கண்ணா லட்டு தின்ன ஆசையா), நடிகர் சௌந்தரராஜா ‘மன்னாரு’ படத்தின் தயாரிப்பாளர் சரண், நடிகர் பாலசரவணன் கலந்துகொண்டனர்.

அப்போது இயக்குநர் பிரபுசாலமன் பேசியது..
"இந்த மேடையில நிக்கிறது, பெருமையா இருக்கு. அதே சமயம் நெகிழ்ச்சியாவும் இருக்கு. வார்த்தைகளே இல்லாமல் அந்த ஸ்பெஷல் சில்ட்ரன்ஸ் பத்தி மைம் கோபி குழுவினர் நிகழ்த்திக் காட்டியது அற்புதமா இருந்துச்சு. என் சார்பாக ஒரு சிறு உதவியா, அந்தக் குழந்தைக ரு.25,000/- வழங்குறேன். தொடர்ந்து என்னோட அன்பும் ஆதரவையும் தரணும்னு ஆசைப்படுறேன்" என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில்...
"நாங்கள்லாம் படாதபட்டு பண்ற விஷயங்களை நீங்க அசால்ட்டா பண்றீங்க. அதுவும் முகத்துல வெள்ளை மை பூசிக்கிட்டு, சவுண்ட் விடாம மௌனமா அசத்துறீங்க. உங்க எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த மேடையில நிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த தெய்வக் குழந்தைகளுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்துற மைம் கோபிக்கும் அவரோட குழுவினருக்கும் என்னோட பாராட்டுக்கள். மேடையில நீங்கள்லாம் இவ்ளோ அசத்தலா நடிக்கிறதைப் பார்க்கும்போது ஒண்ணு மட்டும் புரிஞ்சது. நம்மல்லாம் நடிப்புல இன்னும் நிறைய கத்துக்கணும்ங்கிறதுதான் அது. எல்லாருக்கும் மறுபடியும் வாழ்த்துக்கள். இந்த மேடையில் நிக்கிற வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றிகள்" என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;