‘அழகுராஜா’ பாடல்கள் எப்போது?

‘அழகுராஜா’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 17-Sep-2013 4:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற தீபாவளி ரேசில் குதிக்கத் திட்டமிட்டு விறுவிறுவென வேலைகள் நடந்து வரும் படங்களில் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படமும் ஒன்று! 'ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தாயாரித்து வரும் படம் இந்தப் படத்தை ’சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என ஹாட்ரிக் வெற்றியை தந்த எம்.ராஜேஷ் இயக்க, கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிறார்கள். எம்.ராஜேஷ் - கார்த்தி முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ள இப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. தீபாவளி பட்டாசாக வெடிக்க இருக்கும் இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசை அமைத்திருக்க, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;