பாலிவுட்டில் ’நிழல்கள்’ ரவி!

பாலிவுட்டில் ’நிழல்கள்’ ரவி!

செய்திகள் 17-Sep-2013 2:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரகாஷ்ராஜ், சத்யராஜ் வரிசையில் பாலிவுட்டில் தற்போது நுழைந்திருக்கும் இன்னொரு கோலிவுட் பிரபலம் ‘நிழல்கள்’ ரவி. இவர் ஏற்கெனவே ‘ஆத்மி’ என்ற ஒரு ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறார் என்றாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் நுழைந்து நடித்து வரும் படம் ’கௌரி தேரே பியார் மெய்ன்’. இந்தப் படத்தை ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக கரண் ஜோஹர் தயாரிக்கிறார். இதில் இம்ரான் கான் ஹீரோவாக நடிக்க, அவரது தந்தையாக ‘நிழல்கள்’ ரவி நடிக்கிறார். இம்ரான் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, புனித் மல்ஹோத்ரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. தென்னிந்தியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘மெட்ராஸ் கஃபே’ படங்களை போன்று இப்படத்திலும் நிறைய தென்னிந்திய சமாச்சாரங்கள் இருக்கிறதாம். படம் நவம்பரில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஷாருக்கான் சிக்ஸ் பேக் வொர்க் அவுட் - வீடியோ


;