சின்மயிக்கு டும் டும் டும்!

சின்மயிக்கு டும் டும் டும்!

செய்திகள் 17-Sep-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே…’, ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘சஹானா…’ உட்பட ஏராளமான இனிய பாடல்களைப் பாடி தமிழ் சினிமா உலகில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பிடித்துள்ளதோடு, ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளவர் பின்னணிப் பாடகி சின்மயி. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பல பாடல்களை பாடியிருக்கும் சின்மயி, ராகுல் ரவீந்தர் என்ற நடிகரை திருமணம் செய்யவிருக்கிறார். ‘மாஸ்கோவின் காவிரி’, ‘சூரிய நகரம், ‘விண்மீன்கள்’ ஆகிய படங்களில் நடித்தவர் ராகுல் ரவீந்தர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்ட, இவர்களது திருமண நிச்சயதார்த்தம் விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது. திருமணம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;