‘‘சேரன் நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை’’ - வசந்தபாலன்

‘‘சேரன் நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை’’ - வசந்தபாலன்

செய்திகள் 16-Sep-2013 4:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மண்ணின் மனத்தோடு மனித உறவுகளையும், சமுதாயத்தின் ஓட்டைகளையும் தன்னுடைய படங்கள் மூலமாக சாடி வருபவர் இயக்குனர் சேரன். சர்வானந்த், நித்யாமேனன் நடிக்கும் படம் ‘ஜே.கே. எனும் நன்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட, இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி இருவரும் வந்திருந்த அனைவரையும் வரவேற்க, பொண்வண்ணன், சரண்யா இருவரும் தொகுத்து வழங்கினர். சேரனை பற்றியும் படத்தை பற்றியும் பிரபலங்கள் பேசும் வீடியோ தொகுப்பை ஓளிப்பரப்பினர். அதில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் "சேரனின் பல படங்களுக்கு நான் ரசிகன். சில படங்களை திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறேன். அவர் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. இயக்குனராக இருந்து பல படங்களைப் படைக்க வேண்டும். தயவு செய்து நடிகாக்காதீர்கள் பார்க்க முடியவில்லை." என்றார்.

இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, ‘‘இன்றைய இளைய இயக்குனர்கள் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கின்றனர். எப்படிக் கொடுத்தாலும் ஒரு போதும் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலச்சாரத்தையும் மறக்காமல் இருக்க வேண்டும்.

சேரன் உண்ர்ச்சிகரமான அற்புத கலைஞன். மண்வாசனையுடன் படங்களை இயக்குபவர். ‘தவமாய் தவமிருந்து’ படத்தை பார்த்தபோது என்னால் இது போல ஒரு படமெடுக்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டதுண்டு. மாற்றங்கள் வரவேற்கதக்கது தான். என் தாத்தா போட்ட ஒத்தையடி சாலையை என் தந்தை வண்டிச்சாலை ஆக்கினார். நான் தார்ச்சாலை ஆக்கினேன். நாளை என் மகன் அதை சிமெண்ட் சாலை ஆக்குவான். மாற்றங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும். அந்தப் பாதையை விட்டுவிலக கூடாது’’ என்றார்.

நிகழ்ச்சியின் முடிவாக சேரன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கூன் - டிரைலர்


;