‘நயனு’க்கு இப்போ டென்!

‘நயனு’க்கு இப்போ டென்!

செய்திகள் 16-Sep-2013 12:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மனசின்அக்கரே’ மலையாளப் படத்தின் மூலம் 2003ல் அறிமுகமான நயன்தாரா சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2005ல் ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்த வைத்த நயன்தாரா, ‘சந்திரமுகி’யில் ரஜினி, ‘கஜினி’யில் சூர்யா, ‘பில்லா’வில் அஜித், ‘வில்லு’வில் விஜய், ‘வல்லவனி’ல் சிம்பு, ‘யாரடி நீ மோகினி’யில் தனுஷ், ‘பாஸ் என்கிற பாஸ்கரனி’ல் ஆர்யா என தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடிபோட்டு தமிழ் ரசிகனின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தார்.

‘2010’ல் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தோடு தமிழில் நடிப்பதை நிறுத்திய நயன்தாரா அதன்பிறகு தெலுங்கிலும், மலையாளத்திலும் கவனம் செலுத்தினார். காதல், கிசுகிசு என கொஞ்ச காலம் நயன்தாராவின் வாழ்க்கையிலும் சூறாவளி வீசியது. அத்தனை தடைகளையும் மீறி மீண்டும் தற்போது முழுமூச்சாக நடித்துவரும் நயன்தாராவுக்கு தமிழ் ரசிகன் இன்னமும் தன் நெஞ்சில் தனி இடம் கொடுத்திருக்கிறான் என்பது தற்போது அவர் நடித்துவரும் படங்களின் பட்டியலைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

ரெண்டாவது இன்னிங்ஸை அதிரடியாய் ஆடுங்கள் நயன்... வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;