யாசகன் இசை வெளியீட்டு விழா

யாசகன் இசை வெளியீட்டு விழா

செய்திகள் 14-Sep-2013 12:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அங்காடி தெரு மகேஷ், நிரஞ்சனா நடிக்கும் அமீரின் உதவியாளர் திரைவாணன் இயக்கியுள்ள முதல் படம் "யாசகன்". சதீஷ் சக்கரவர்த்தி இசையமைத்த இப்படத்தின் பாடல்களை இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர்கள் சசிகுமார், கே.வி.ஆனந்த், சசி, எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவின் முதலில் பேசிய எஸ்.ஆர்.பிரபாகரன் "நான் உதவி இயக்குனராக இருந்த போது யாசகன் படத்தின் திரைக்கதையை முதன் முதலாக நகலெடுத்தேன் ரசிக்க மட்டுமே தெரிந்த அந்த சமயத்தில் படித்து ரசித்த காட்சிகளை அப்படியே இன்று திரையில் கொண்டு வந்திருக்கிறார். இன்றைய சமுதாயத்துக்கு தேவையான ஒன்று. நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என்றார்.

இயக்குனர் கே.வி ஆனந்த் பேசும் போது. இந்தப்படத்தின் கேமிரா மேன் என்னுடைய உதவியாளர் பாபு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆக்‌ஷன், கட், டேக் இந்த வார்த்தைகளை விட அதிகம் கேட்கும் வார்த்தை பாபு. செட்டில் எல்லா விஷயங்களையும் கவணித்து கொள்வார்,ஏதாவது தேவையென்றால் இவரை கூப்பிட்டால் உடனே கிடைத்துவிடும் திறமையானவர் எனது உதவியாளர்களில் இவர் தான் கடைசி இவரும் கேமிராமேன் ஆகிவிட்டதால் இனிமேல் புதிய உதவியாளர்களைத் தான் வைத்து கொள்ள வேண்டும்.எனது பல படங்களுக்கு பலமாக இருந்தவர்.

இவரைத் தொடர்ந்து பேசிய அமீர், "நான் முதல் படமெடுக்கும் போது பாலாவிற்கு என்ன பதற்றம் இருந்ததோ அது எனக்கு சசிகுமார் படமெடுக்கும் போது இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திராவிடம் இருந்து வரும் போது நாங்கள் அவருடைய புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் அந்த வகையில் இன்று திரைவாணன் முதல் படமெடுக்கும் போதும் அந்த பதற்றம் இருக்கிறது. சசிகுமாரும், திரைவாணனும் மெளனம் பேசியது படத்தில் எனது உதவியாளர்கள். சசிகுமார் இயக்குனாராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றி பெற்று பாலா படத்திலேயே விரைவில் நடிக்க உள்ளார். யாசகன் படத்தின் பாடல் காட்சிகளை பார்க்கும் போது திரைவாணனும் வெற்றி பெறுவார் என்று தெரிகிறது வாழ்த்துக்கள் என்றார். திரைவாணன் நண்றி கூற விழா முடிந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - ஐயோ அடி ஆடியோ பாடல்


;