’சூது கவ்வும்’ படத்திற்கு அடுத்து?

’சூது கவ்வும்’ படத்திற்கு அடுத்து?

செய்திகள் 12-Sep-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்து, நலன் குமாரசாமி இயக்கிய படம் ’சூது கவ்வும்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிய இந்தப் படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கவுள்ள படத்தையும் ‘சூது கவ்வும்’ படத்தைத் தயாரித்த சி.வி.குமாரே தயாரிக்க இருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த மாத கடைசியில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞ்ரகள், படத்தின் டைட்டில் ஆகியவற்றின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக ஒரு பெரிய நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்ப்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - டிரைலர்


;