கமல் வெளியிடும் டிரைலர்!

கமல் வெளியிடும் டிரைலர்!

செய்திகள் 11-Sep-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘நினைத்தாலே இனிக்கும்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்பிரதா முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் இயற்றிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்! இந்தப் படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு விரைவில் ரிலீசாகவிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 13-ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;