முதல் இடத்தில் விஜய், சூர்யா… அடுத்து அஜித்… கார்த்தி!

முதல் இடத்தில் விஜய், சூர்யா… அடுத்து அஜித்… கார்த்தி!

செய்திகள் 11-Sep-2013 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பெரும்பாலான திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு சில வியாபார விஷயங்களை பகிரங்கமாக வெளியிடுவதில்லை. ஆனால் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா கொஞ்சம் மாறுபட்டவர். இவர் கோலிவுட்டின் நான்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் சாட்லைட் வியாபாரம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ மற்றும் ‘பிரியாணி’ படங்களை சன் டிவி நிறுவனம் தலா 11 ½ கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக குறிப்பிட்டிருப்பதோடு, படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தின் ‘வீர்ம் 13 கோடிக்கும், விஜய்யின் ‘தலைவா’ படம் 15 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படமும் விஜய் படத்துக்கு இணையான தொகைக்கு விலை பேசப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;