பிரபு சாலமனின் அடுத்த படம்?

பிரபு சாலமனின் அடுத்த படம்?

செய்திகள் 11-Sep-2013 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மைனா’, ’கும்கி’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி பரபரப்பாட பேசப்பட்ட இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘கும்கி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கும் படம் என்ன? என்ற கேள்வி கோலிவுட் ரசிகர்களிடையே இருந்து வந்தது. அடுத்து இவர் இயக்கும் படத்திற்கு ’கயல்’ என்று பெயர் வைத்துள்ளார். ‘மைனா’, ‘கும்கி’ படங்களுக்கு இசை அமைத்த டி.இமான் தான் இந்த படத்திற்கும் இசை அமைப்பாளர். படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;