விஜய்க்கு அடுத்து பரத்!

விஜய்க்கு அடுத்து பரத்!

செய்திகள் 10-Sep-2013 10:47 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தைத் தொடர்ந்து ’ஜாக்பாட்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் பரத். இந்த படம் தவிர ‘கூதற’ என்ற மலையாள படத்திலும் நடிக்க இருக்கிறார் பரத். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க பரத் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார். வித்தியாசமான கதையுடன் உருவாகும் படமாம் இது. இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. பரத், ஏற்கெனவெ ’ஃபார் த பீப்பிள்’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். மோகன்லாலுடன் பரத் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால் – விஜய் இணைந்து நடிக்கும் ’ஜில்லா’ படம் விறுவிறுவென வளர்ந்து வருகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;