மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் அளித்த 'ஜில்லா' யூனிட்!

மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் அளித்த ‘ஜில்லா’ யூனிட்!

செய்திகள் 7-Sep-2013 1:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

1978--ல் ‘திரநோட்டம்’ என்ற மலையாள படத்தின் மூலம் தனது சினிமா கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர் மோகன்லால். மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலாக ஏராளமான படங்களில் நடித்து, கௌரவமிக்க பல விருதுகளையும், பதவிகளையும் பெற்றவர். மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மோகன்லால் நடிக்க வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது சம்பந்தமாக மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’35 வருடங்கள்… என்னுடைய கலையுலக வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக இருந்த குருமார்கள், என்னை நேசித்து எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் மற்றும் என்னுடைய சினிமா வாழ்க்கையில் எனக்கு உறுதுணை புரிந்த அத்தனை பேருக்கும் சிரம் குனிந்து என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக பிரம்மாண்ட கேக் ஒன்றை வரவழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த வேளையில் மோகன்லாலுக்கு இன்னொரு பெருமையும் கிடைத்திருக்கிறது. அதாவது ஃபேஸ்புக்கில் 10 லட்சத்திற்கும் மேலான ’லைக்’குகளை பெற்ற முதல் மலையாள நடிகர் என்ற பெருமை அது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;