எம்ஜிஅரை திருப்பிக் கொடுத்த விஷால்!

எம்ஜிஅரை திருப்பிக் கொடுத்த விஷால்!

செய்திகள் 7-Sep-2013 12:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஷால் கதாநாயகனாக நடித்து, சுந்தர்.சி. இயக்கியிருக்கும் படம் ‘மதகஜராஜா’. இந்தப் படத்தை ’ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்து பல மாதங்களாகி விட்ட நிலையில் படம் ரிலீசாகாமல் இருந்தது. இதனால் படத்தின் ஹீரோ விஷால் ’மதகஜராஜா’வை வாங்கி வெளியிட முடிவு செய்து ஒரு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கினார்.

படம் நேற்று (6-9-13) வெளியாக இருந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்தவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்கெனவே இருந்து வந்த ஒரு சில பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்து பூதாகாரமாக வெடித்தது. இது சம்பந்தமாக பல பேச்சு வார்த்தைகள் நடந்தாலும் அவையெல்லாம் தோல்வியில் முடிந்து விட்டது. இதனால பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் ஏற்பட்ட ‘மதகஜராஜா’ படத்தை வெளிட விஷாலால் முடியாத சூழ்நிலை ஏற்பட, படத்தை தயாரிப்பாளரிடமே திருப்பி கொடுத்து விட்டார்! இதனால் படத்தை தயாரித்த ’ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனமே படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் இப்போது களமிறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மதுரை - டிரைலர்


;