சரவெடி தீபாவளி!

சரவெடி தீபாவளி!

செய்திகள் 6-Sep-2013 11:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற தீபாவளி ரசிகர்களுக்கு ‘சரவெடி’ கொண்டாட்டம் தான்! இயக்குனர் எம்.ராஜேஷ், கார்த்தி, காஜல் அகர்வால் கூட்டணியின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, இயக்குனர் விஷ்ணுவர்த்தன், அஜித் ,நயன்தார, ஆர்யா, டாப்சி கூட்டணியின் ‘ஆரம்பம்’, இயக்குனர் செல்வராகவன், ஆர்யா, அனுஷ்கா கூட்டணியின் ‘இரண்டாம் உலகம்’ என மூன்று பிரம்மாண்ட படங்கள் ரிலீசாகி இனிய விருந்து படைக்கவிருக்கிறது.

இதில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழிகள் தவிர ரஷியா, ஜியார்ஜியா, உஸ்பெக், டர்கிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த மூன்று படங்கள் தவிர, ரஜினிகாந்தின் ’கோச்சடையான்’ படம் உட்பட வேறு ஒரு சில படங்களும் தீபாவளி ரேசில் குதிக்கும் விதமாக தற்போது விறுவிறுப்பாக வேலைகள் நடந்து வருகிறது. ஆக, இந்த தீபாவளி ரசிகர்களுக்கு சரவெடி தீபாவளிதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஜித்தின் 53-வது பட டீஸர்


;