சரித்திரம் படைத்த சென்னை எக்ஸ்பிரஸ்!

சரித்திரம் படைத்த சென்னை எக்ஸ்பிரஸ்!

செய்திகள் 6-Sep-2013 11:36 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமா சரித்திரத்திலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பெற்றுள்ளது. சென்ற மாதம் 8—ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகி, கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தில், எக்ஸ்பிரஸ் வேகத்தில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்னால் ஆமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் தான் வசூல் சாதனையில் (392 கோடி ரூபாய்) முதல் இடத்தில் இருந்து வந்தது.

இப்போது ஆமீர்கானின் இடத்தை ஷாருக்கான் பிடித்துக்கொண்டுள்ளார். ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியுடன் சத்யராஜ் உட்பட நம்ம ஊர் கலைஞர்கள் பலர் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் ஆமீர்கானின் 'தூம் 3' மற்றும் ரித்திக் ரோஷனின் 'க்ரிஷ் 3'. இந்தப் படங்கள் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் சாதனையை முறியடிக்குமா? என்பதுதான் பாலிவுட் ரசிகர்களின் தற்போதைய கேள்வி! அதற்கான விடைக்கு காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;