காதலில் சொதப்பிய இயக்குனருடன் நஸ்ரியா!

காதலில் சொதப்பிய இயக்குனருடன் நஸ்ரியா!

செய்திகள் 6-Sep-2013 10:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குனர் பாலாஜி மோகன். குறும்பட இயக்குனராக இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிபெற்ற இவர் அடுத்து இயக்கப் போகும் படம் என்ன? யார் ஹீரோ என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. பாலாஜி மோகன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனும், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவருமான துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

துல்கர் சல்மான் முதன் முதலாக தமிழில் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமா ரசிகர்களின் தற்போதைய கனவு தேவதையான நஸ்ரியா நசீம் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்தப் படத்தின் பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. துல்கர் சல்மான், நஸ்ரியா தற்போது ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்திலும் நடித்து வரும் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆந்திரா மெஸ் - டிரைலர்


;