நடிக்க வரும் காமெடி பிரபலத்தின் வாரிசு!

நடிக்க வரும் காமெடி பிரபலத்தின் வாரிசு!

செய்திகள் 6-Sep-2013 10:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருக்கிற வரிசையில் இப்போது நடிகர் மயில் சாமியின் மகன் அன்புவும் சேர்ந்து விட்டார்! இவர் நடிக்கும் படத்திற்கு ‘தேரடி வீதி திருக்கண்ணபுரம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை திருவாரூர் பாபு இயக்குகிறார். இவர், இயக்குனர் சரணிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பதும் ‘கந்தா’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை ‘கில்லி’, ‘தூள்’ ‘ஒஸ்தி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த சாம் டி.ராஜ் இசை அமைக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வர, படப்பிடிப்பு விரைவில் தஞ்சாவூரில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டீசர்


;