ஹீரோவை அழ வைத்த இயக்குனர்!

ஹீரோவை அழ வைத்த இயக்குனர்!

செய்திகள் 5-Sep-2013 5:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மிர்ச்சி’ செந்தில் - விஜயலட்சுமி நடிப்பில் வெற்றி மகாலிங்கம் இயக்கியிருக்கும் படம் ‘வெண்நிலா வீடு’. தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆதர்ஷ் ஸ்டுடியோ சார்பில் பி.வி.அருண் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார் கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து. இப்படத்தின் இசை வெளியீடு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. ‘கலைப்புலி’ எஸ்.தாணு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட, அதனை இயக்குனர் சேரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வெற்றி மகாலிங்கம், ‘‘இப்படம் பெண், பொன், மண் இவற்றால் ஒரு மனிதன் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதைப் பற்றிச் சொல்லும் ஒரு குடும்பச் சித்திரமாக இருக்கும். இப்படத்தின் கதையை கேட்டு முடித்த பிறகு நடிகர் ‘மிர்ச்சி’ செந்தில், கதையின் பாதிப்பால் அழுதுவிட்டார். அதேபோல் இப்படத்தில் 2 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க நடிகை விஜயலட்சுமியை அணுகியபோது, முதலில் அவர் ரொம்பவும் யோசித்தார். பிறகு நான் கதையைச் சொன்னதும், ‘இந்தக் கேரக்டரில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’ என்று கூறி ஆர்வமாக நடித்துக் கொடுத்தார். எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இப்படம் இருக்கும்’’ என்றார்.

மேலும் விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் படத்தைப் பற்றி வாழ்த்திப் பேச விழா இனிதே நிறைவுபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சோன் பப்டி - ஹேய் சாக்லேட் வீடியோ பாடல்


;